சிலருக்கு பேசும் போது வார்த்தைகள் அரைகுறையாக வெளிவருவதோ, ஒரே வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதோ, சில வார்த்தைகள் வராமலே இருப்பதோ போன்ற குறைகள் உள்ளன.
இதைத்தான் திக்கு வாய் என்று கூறுகிறார்கள். இதுபோனற் பாதிப்புகளுக்கு காரணமான மரபணுக்கள் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வில் அமெரிக்காவின் காதுகேளாமை மற்றும் உடலியல் தொடர்பு கோளாறுகள் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டது.
இந்த ஆய்வில் சுமார் 673 பேர் ஈடுபடுத்தபட்டனர். இவர்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் சாதாரணமாக பேசும் தன்மையைப் பெற்றவர்களும் அடங்குவர்.
அவர்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் 3 வித மரபணுக்கள் திக்கிப் பேசுவதில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரபணுக்கள்தான் ஒருவர் சாதாரணமாக பேசுவதிலும், திக்கித் திக்கித் பேசுவதிலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.

Post a Comment