பொதுவாக மருத்துவ ஆராய்ச்சிகள் பலவகைப்படும். சில புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியதாக இருக்கும்.
இதில், டி, காபியைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. நடந்து கொண்டு வருகின்றன. அவ்வப்போது டி குடிப்பதால்.. காபி குடிப்பதால் என்று பல நன்மைகள் பற்றியும், சில தீமைகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் வந்து கொண்டுதானிருக்கிறது.
ஆனால் காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் வெளியான தகவல்கள் உறுதி செய்கின்றன.
காபி குடித்தால், மூளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது.
இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர்களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்! அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், பர்கின்சன்ஸ் என்ற நோய் வரும் வாய்ப்பை 30 விழுக்காடு குறைக்கிறதாம்.

Post a Comment