0


விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌‌ரி‌வி‌க்‌கிறது. 

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும், சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும், சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால் இதுபோ‌ன்ற நோய்கள் ந‌ம்மை‌த் தா‌க்காம‌ல் கா‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.

எ‌னினு‌ம் ‌சி வை‌ட்ட‌மி‌ன் ‌நிறை‌ந்த உணவுகளை சா‌ப்‌பிடு‌ம் போது நமது உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி உ‌ருவா‌கி, அதனா‌ல் இய‌ற்கையாகவே பல நோ‌ய்‌க‌ள் ந‌ம்மை‌த் தா‌க்காம‌ல் கா‌க்கலா‌ம் எ‌ன்பது‌ம் ஒரு உ‌ண்மைதா‌ன்.

Post a Comment

 
Top