0


திடீரென ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை அளவு குறை‌ந்து உட‌ல் நடு‌க்க‌ம், அ‌திகமாக ‌விய‌ர்‌த்த‌ல், பட‌பட‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் பரபர‌ப்பு ஆகாம‌ல் உடனடியாக அதனை ச‌ரி ச‌ெ‌ய்யு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்க வே‌ண்டு‌ம்.

ச‌ர்‌க்கரை அளவு குறைவதை ‌சில ‌அ‌றிகு‌றிகளா‌ல் அ‌றி‌ந்து கொ‌ண்டது‌ம், உடனடியா சா‌க்லே‌ட், ‌பி‌ஸ்கெ‌ட் அ‌ல்லது ச‌ர்‌க்கரையை‌க் கூட வா‌யி‌ல் போ‌ட்டு சா‌ப்‌பிடலா‌ம்.


பழ‌ச்சாறோ அ‌ல்லது ச‌ர்‌க்கரை கல‌ந்த ‌நீரையோ பருக வே‌ண்டு‌ம். தேவை‌ப்ப‌ட்டா‌ல் 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌மீ‌ண்டு‌ம் ஒரு முறை பருகலா‌ம்.

ச‌ர்‌க்கரை நோயா‌ளி ‌சுய‌நினைவை இழ‌க்கு‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல் பழ‌ச்சாறோ அ‌ல்லது ச‌ர்‌க்கரை கல‌ந்த ‌நீரையோ பருக வை‌க்க முய‌ற்‌சி‌க்க வே‌ண்டா‌ம். இது உ‌யிரு‌க்கு ஆப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம்.

உடனடியாக அரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவரை அணு‌கி ‌சி‌கி‌ச்சை பெறுவது ந‌ல்லது.

Post a Comment

 
Top